Friday, October 18, 2013

யாழ் நாச்சிமார் கோயில் தேர் மூட்டியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் தேர் மூட்டியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை 4 மணியளவில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து கோயிலுக்கு முன்னாள் உள்ள முச்சக்கரவண்டியின் சாரதிகள் கோயில் தேர் மூட்டிப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஆலய நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து அதனைப் பார்வையிட்ட ஆலயத்தினர் அங்கு பெண் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கழுத்துப்பகுதியில் வெட்டுக்காயம்ம் தலையில் அடிகாயங்களுடனும் முகம் மற்றும் முகம் எரிந்த நிலையில் காணப்படுவதுடன் இவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்றும் நாற்பது தொடக்கம் நாற்பந்தைந்து வயது மதிக்கத் தக்கவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் வைக்கப்பட்டுள்ளது மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்த காணப்பட்ட இந்த சடலமானது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

காங்கேசன்துறை வீதியினில அதிக மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியினில் இவ்வாறு சடலம் கிடந்தமை அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

3 comments :

Anonymous ,  October 18, 2013 at 6:45 AM  

The northern province is slowly coming under the control of criminals,gagnsters,rapists:We do truly believe the public is frightened to these elements.Peace, order, law and security are declining
It is a fun that Politicians fight for their own benefits,concessions and luxury lives at this juncture.

Anonymous ,  October 18, 2013 at 11:20 AM  

Women rights activists have enough to do in north Srilanka,as the women society suffers a lot in the hands of criminals,rowdies,gangsters and rapists.

Anonymous ,  October 18, 2013 at 11:23 AM  

VIP's of Jaffna should not turn blind eyes to these sorrowful events.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com