அப்பாடா உட்கட்சி மோதல் தொடர்பில் வாய் திறந்தார் முதலமைச்சர் விக்கி!
கடந்த பல மாதங்களாக கூட்டமைப்புககள் நடந்த உட்கட்சி மோதலின் உச்சக்கட்ட விளைவாக வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய மூன்று கட்சிகள் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்துடன், பல் வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை தங்களுக்குள்ளேயே சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந் துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார். அப்போது வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து, முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்றும் இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைதான் இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment