Monday, October 7, 2013

பிள்ளையின் பிரேரணையொன்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

மாகாண சபை, பிரதேச சபைகளின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மனித உரிமை கள் தொடர்பான கல்வியைப் புகட்டுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்நாட்டுக்குச் சுற்றுலா வந்தவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளிடம் முன்வைத்த பிரேரணைக்கேற்பவே இக்கல்வி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மகாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள வட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுறுத்துவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கருத்திற் கொண்டுள்ளதாகவும் பிரதிபா மகாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment