Thursday, October 31, 2013

ஏன் என்னிடம் பழி வாங்குவதோ... எனக்குத்தான் கேட்பதில்லையே... – மர்வின் ஜனாதிபதிக்கு கேட்கும் வண்ணம் சொல்கிறாரே...

எங்கே... எங்கே... களனியின் உரிமையாளர்? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்ற 27 ஆம் திகதி காலை வேளை, பேலியகொடையில் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையைத் திறந்து வைப்பதற்கு முன்னர் யாரோ ஒருவரைத் தேடுவது தெரிந்தது.

ஜனாதிபதி தேடுபவர் மர்வின் சில்வாதான் என்பது அங்கு கூடியிருந்தோருக்கு விளங்க அதிக நேரம் செல்லவில்லை. அந்நேரம் மர்வின் சில்வா அனைத்து முக்கிய உறுப்பினர்களுக்கும் பின்பகுதியிலேயே நின்றிருந்தார்.

ஜனாதிபதியின் குரல் மர்வின் சில்வாவின் காதில் கேட்டதுதான்... போங்கள்... மர்வின் சில்வா, அங்கு கூடியிருந்தோரை பின்னே தள்ளிக் கொண்டு முன்னே வந்துவிட்டார். என்றும் இல்லாத புன்னகையும், புன்முறுவலும் அவரின் முகத்தில் குடிகொண்டிருந்தது. காரணமின்றி அமைச்சர் அவ்வாறு செல்லவில்லை. (சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன?)

கூடியிருந்த அனைவரையும் மகிழ்வூட்டும் பாடலொன்று பாடிக்கொண்டுதான் சென்றார் அமைச்சர்... (போங்கள்..)

//குற்றம் இழைத்தாலும் விருப்போடு அல்ல...
துன்புறுத்த, பழிவாங்க, குறைகூற அல்ல...
ஏன் என்னில் பழியோ.. விளங்கவில்லையே எனக்கு...
குற்றமொன்று இழைத்தேனா... மன்னிக்க வேண்டுகிறேன்...
நீ என் இரு கண்கள் போலல்லவா?// (தமிழ் பெயர்ப்பு)

அவ்வாறு பாடிக் கொண்டே ஜனாதிபதியின் முன்னே வரும்போது, மர்வின் சில்வாவின் தலையை இரண்டு மூன்று தடவைகள் ஜனாதிபதி தன் கரங்களால் ஒரு குழந்தையின் தலையைக் கோதுவது போல் கோதிவிட்டார். (பாருங்கள்...!)

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையை திறந்துவைத்து, அப்பாதையில் தனது வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, வாகனத்தில் முன் ஆசனத்தில் அவரது மனைவி அமர்ந்திருந்தார். பின் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அமைச்சர் மர்வின் சில்வாவுக்குத்தான் அழைப்பு விடப்பட்டது...

(“வரதக் கலத் சிதகின் நொவே...” என்ற பாடல் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. - லக்பிமவிலிருந்து கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment