பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் - ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடமாகாண சபை அமைச்சர் தெரிவில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப் பட்டார். இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினர் அதற்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெற வில்லை' எனவும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளை அதன் உறுப்பினர்கள் தற்போது வன்மை யாக கண்டித்து வருகின்றனர். தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது
1 comments :
ஐயோ எங்கட மண்டையன் குழுவின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பிக்கு அமைச்சுப்பதவி கொடுக்க வில்லையோ, என்ன நியாயம் தலைவரின் தம்பி சர்வேஸ்வரன் இருக்க இன்னொருவருக்கு அமைச்சுப்பதவியோ.. ஐயோ ஐயோ
சிறிதரன் எம்பி தமிழரசுக்கட்சிக்கு மாறினது போல் அமைச்சர் எப்ப மாறப்போறார்..
நாட்களை நான் சொல்லமாட்டேன். ஆனால் மிக விரைவில் அறிக்கை ஒன்று வரும்..
அந்த அறிக்கையில் ஐங்கரனாகிய நான் மண்டையன் குழுவிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைந்து விட்டேன் என்று பதிவாகியிருக்கும்..
Post a Comment