ஒப்பந்த அடிப்படையில் வெல்லவாயாவில் தாயும் மகளும் கொலை.
கடந்த நாலாம் திகதி வெல்லவாயா குடா ஓயா என்ற இடத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட சம்பவம் அவர்களின் வீட்டையும் காணியையும் அபகரித்துக் கொள்வதற்காக பெண் ஒருவரால் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகிறது.
இக்கொலை சம்பந்தமாக புலனாய்வு செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீடென்றில் மறைந்த குறிப்பிட்ட பெண்ணையும் மற்றும் மூவரையும் கைது செய்து வெல்லவாயா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவர்களை விளக்க மறியலில் வைப்பதுடன் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தமக்கு பூரண அறிக்கை தரவேண்டும் என்று வெல்லவாயா மாஜிஸ்ட்ரேட் பணித்துள்ளார்.
50000 ரூபா ஒப்பந்தத்தில் இந்த இரட்டைக் கொலையைச் செய்ததாகவும் ஒப்பந்த தொகையை குறிப்பிட்ட பெண் இன்னும் கொடுக்க வில்லை என்று அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment