இலங்கை பாராளுமன்ற செயன்முறைகள் எதிர்வரும் புதன் கிழமை முதல் நேரலையாக ஒலி-ஒளி பரப்பப்பட விருப்ப தால் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பராளுமன்றத்துக்கு எதிரே உள்ள பாராளுமன்ற மைதானத்தில் விசேடமாக நிறுவப்பட் டுள்ள பாரிய திரையில் நேரடியாக காட்டப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் முதலாவதாக காட்டப்படவிருப்பது திறமுறை அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சட்டம் சம்பந்தமான விவாதம் இதனை தொடர்ந்து சூதாட்ட கிளப்புகளுக்கு வரிச்சலுகை அளிப்பது பற்றிய விவாதம் ஆகியன காட்டப்படவிருப்பதுடன், வியாழக்கிழமை மற்றும் வௌ்ளிக் கிழமைகளிலும் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளும் காட்டப்படவுள்ளது.
தொடர்ந்து நவம்பர், மற்றும் டிசம்பரில் வரவு-செலவுத்திட்ட மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளதுடன் இதனையும் ஒலி-ஒளி பரப்புவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளும் ஏற்றுக் கொண்டுளன எனக்குறிப்பிட்டார்.
இதே வேளை பொருளாதார நிலை மற்றும் சரியானதொரு கொள்கை இல்லாமை காரணமாக தற்போது தாமதம் ஆகுவதற்கு காரணமாகும் என பாராளுமன்ற அலுவலர் ஒருவர் கூறினார் எனினும் தற்போது பாராளுமன்ற நடவடிக்கைகளை பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள் மட்டும் காட்டப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment