Saturday, October 5, 2013

குளத்தை நிரப்பி தனிச்சொத்தாக்கிய ஹனிபா! பாய்ந்தார் அம்பாறை தேரர்!

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வட்டமடுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கொக்குலக்குளம் எனும் குளத்தினூடாக இருநூற்றுக்கு மேற்பட்ட வருட காலங்களாக 700-800 ஏக்கர் நெற்காணிகளுக்கு மக்கள் நீர்பாச்சி வந்திருக்கின்றார்கள்.

ஆனால் இந்த குளம் கடந்த 10 களுக்கு முன்னர் ஹனிபா வட்டவிதானை என்பவரால் டோசர் செய்யப்பட்டு தனது சொந்த நிலமாக்கப்பட்டுள்ளதுடன் இவர் இதை தனது நெற்காணியாக்க முற்பட்டுளார். இதற்கான ஒத்தாசை அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல் வாதிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த குளம் டோசர் செய்யப்பட்டதனூடாக 700-800 ஏக்கர் காணிகளுக்கான நீர் பாச்சல் தடைசெய்யப்பட்டு அதனூடாக வாழ்கையை செலுத்திவந்த விவசாயக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தது மாத்திரம் அல்ல அந்தப்பிரதேசத்திலுள்ள கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் யானைகள் என்பனவும் குடிநீர் அற்று தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுப்படிருந்த விவசாயிகளுக்கு ஹனிபா அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் அவ்விடத்திலிருந்து தமது கால்நடைகளை எடுத்துச்செல்லுமாறும் மிரட்டியுள்ளார்.

குறித்த மக்களின் வாக்குளை பெற்று கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுகபோகம் அனுபவித்து கொண்டிக்கின்றபோது , இது தொடர்பில் முறையிடுவதற்கு யாருமற்ற மக்கள் அம்பாறை சந்திந்திரய தேரர் அவர்களிடம் தமது குறையை எடுத்துரைத்துள்ளனர்.

 குறித்த தேரர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் புஸ்பராசா அவர்கள் சதிதம் ஸ்தலத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஹனிபாவிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது விடயத்தில் இலங்கைநெட் இற்கு கருத்துரைத்த சந்தேந்திரய தேரர் அவர்கள் அம்பாறை மாட்ட தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது வளங்கள் முஸ்லிம்களால் சுரண்டப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறுகின்றபோது அதற்கு குரல்கொடுக்கவும் அந்த மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தான் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறினார்.







No comments:

Post a Comment