Tuesday, October 22, 2013

மீண்டும் நீதிபதியானார் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதல மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீண்டும் நீதிபதியாக கருதி செயற்படுவதாக கட்சி உறுப்பினர்கள் முனுமுனுக் கின்றனர்.

நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதி ராஜாவையா அல்லது முன்னாள் நீதியரசர் விக்கினேஸ் வரனையா முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் கடும் இழுபறி நடந்தது.

இழுபறிக்கு மத்தியில் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் சிபார்சினால் சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு வெற்றி பெற்று முதலமைச்சராகிவிட்டார்.

இந் நிலையில் சி.வியை பொதுநலவாய மாநாட்டுக்கு அழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தமிழரசுக்கட்சியின் செயலாளர் எதிர்த்து அப்படி போக முடியாது என சிவிக்கு கூறியுள்ளார்.

உடனே மேசைத் தட்டிய சிவி எனக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும். எனக்கு யாரும் எதுவும் சொல்லப் சோல்லத் தேவையில்லை. என்னுடைய ராஜதந்திரத்தை யாருக்கும் சொல்ல தேவையில்லை என கட்டளை போட்டிட்டார்.

ஆடிப்போன மாவை வளர்த்த கடாய் மார்பில ஏறி பாயுது என முனுமுனுத்துக் கொண்டு போட்டாராம். இப்ப தமிழரசுக் கட்சிக்கு கட்டளை பிறப்பிக்கும் நீதிபதியானர் சிவி என பரவலாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

4 comments :

Anonymous ,  October 22, 2013 at 10:04 AM  

Mr.CV the chief Minister of Jaffna has the rights to decide on his own,he has the capablity and eligiblity to finalize every matters.
He cannot be a puppet of the TNA,the people of jaffna had selected him with a big majority of votes.He cannot be dictated by any others.We wish him all the best.The others have to stay within their bounds.

Anonymous ,  October 22, 2013 at 11:22 AM  

Interferrence in his official and personal matters is something far beyond the level of discipline.let him be free.We should know what is discipline.

Anonymous ,  October 22, 2013 at 5:15 PM  

Keep always your distance far from the CM,this would give less headache to the CM

Anonymous ,  October 23, 2013 at 12:14 AM  

எங்கள் நீதிமான், முதலமைச்சர் எப்போதும் நல்ல சிந்தனை தெளிவுள்ள முடிவுகளை எடுப்பவர். அவருக்கு இணையாக சம்பந்தன் ஐயாவையும் குறிப்பிடலாம்.
அவர்களின் வழிகாட்டலில் போகவே இன்றைய தமிழினம் விரும்புகின்றார்கள்.

தமிழ் கூட்டணியிலுள்ள கோமாளிகள், கிரிமினல்கள், தங்களின் சுயநலன்களுக்காக பாசிச புலிகள் பாணியிலான அறிவற்ற, அடாவடித்தனமான நடவடிக்கைள் மூலம் அமைதிக்கு பங்கம் விளைவித்து மீண்டுமொருமுறை தமிழ் மக்களுக்கு அழிவை தேடலாம் என நினைக்கிறார்கள்..

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com