Tuesday, October 29, 2013

அமெரிக்காவில் நிதி திரட்டும் முயற்சியில் கூட்டமைப்பு: புலம்பெயர் மக்களே ஜாக்கிரதை

புலம்பெயர் தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாநாட்டுக்கு சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடபகுதி அபிவிருத்திக்கு எனவும் காணாமல் போனவர்களுக்கு எனவும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரே இந்த நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மந்தனின் வலது கையுமான ஏ.சுமந்திரன் ஆகியோர் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஒரு கோடி பத்து லட்சம் வரையிலான நிதியினை திரட்டியிருந்தனர்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதியானது சரியான முறையில் வேட்பாளருக்கு பிரித்துக் கொடுக்கப்படவில்லை. இதில் பெரும் பகுதி நிதி எங்கே? என்று தெரியாது. எவ்வளவு நிதி வந்தது? எவ்வளவு வேட்பாளருக்கு கொடுக்கப்பட்டது? எவ்வளவு மிகுதி இருக்கிறது போன்ற எந்தத் தகவல்களும் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.

இந் நிலையில் மீண்டும் நிதியை கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் கூட்டமைப்பின் தலைமை ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அறிய முடிகிறது. இதற்காக அனந்தியை கையாளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே கொடுக்கப்பட்ட நிதிக்கான கணக்கு விபரங்களை கூட்டமைப்பிடம் நிதி வழங்கும் புலம்பெயர் தமிழர்கள் கவனமாக பெறவேண்டும் என தாயக உறவுகள் தெரிவிக்கின்றனர். தமக்காக வழங்கப்படும் நிதி தமக்கு வந்து சேருகின்றதா என்பதை கண்டு கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

3 comments :

Anonymous ,  October 29, 2013 at 9:34 PM  

புலம்பெயர் புலிப்பினாமிகள் சேர்த்த நிதி எங்கே என்றூம் கேட்டிருந்தால் நல்லதாய் இருந்திருக்கும்

Anonymous ,  October 30, 2013 at 11:32 AM  

Time is running out as they are in a hurry to finish their task

ஈய ஈழ தேசியம் ,  October 30, 2013 at 4:11 PM  

இது தமிழர்களிடம் இரண்டாவது தடவை கொள்ளை அடிக்கும் முயற்ச்சி. கொள்ளை பணத்தில் வாழ்ந்து ருசி கண்டவர்கள் விட மாட்டார்கள் தமிழர்களை.புலி பயங்கரவாதியின் மனைவியும் உண்டில் குலுக்க போகிறது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com