களனி மீண்டும் மர்வின் வசம்....!
களனித் தொகுதியின் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், மக்கள் தொடர்பாடல் அமைச்சருமான மர்வின் சில்வாவை மீண்டும் களனித் தொகுதியின் அமைப்பாளராக நியமிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதேசத்தின் பௌத்த மதகுருமார்கள், பிற மதத் தலைவர்கள் பலரினதும் வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வமைப்பாளர் நியமனத்தை மர்வின் சில்வாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
வெகுவிரைவில் கலைக்கப்பட்டு, மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத் தொகுதிக்கு அமைப்பாளர் ஒருவர் இல்லாமலாகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்குமுகமாகவும், அவ்வாறு ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவுமே இவ்வேற்பாட்டுக்கான முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கம்பஹா மாவட்டத் தலைவர் பசில் ராஜபக்ஷவினால், மர்வினுக்கு தொகுதி அமைப்பாளராக நின்று கருமமாற்றுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment