விபச்சாரத் தொழிலை சட்டரீதியாக்க வேண்டும்!
கொழும்பு மா நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நதில் மாலகொட விபச்சாரத் தொழிலை சட்ட ரீதியாக்க வேண்டும் என்று முன்வைத்த பிரேரணை ,நகரபிதா ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உல்லாசப் பிரயாணத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக கஸீனோவைப் போல விபச்சாரத் தொழிலையும் சட்ட ரீதியாக்கினால் அதன் மூலம் சிறந்ததொரு பொருளாதார அபிவிருத்தியைக் கட்டியெழுப்பலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 10 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்து, அந்த அரசாங்கத்தின் மூலம் கொழும்பு நகரில் விபச்சாரத் தொழில் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் கூடிய உல்லாச நகரமொன்று அமைக்கப்படும் என மாலகொட குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நகரபிதா ஏ.ஜே.எம். முஸம்மில், அவ்வாறான மிக இழிந்ததொரு நடவடிக்கையின் மூலம் நாட்டை வளப்படுத்த தனக்கு அவசியமில்லை எனவும், அதற்கு தான் ஒருபோதும் உடன்படுவதில்லை எனவும் அவ்வாறானதொரு பிரேரணையை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை என்பது ஒரு பௌத்த நாடாகும். அவ்வாறான நாட்டில் இவ்வாறான அசிங்கமான செயலைப் புரிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் நகர பிதா முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment