ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் எவ்வளவு சவால்கள் ஏற்பட்டாலும் இந்த மோசடியான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
எனக்கு எதிராக ராஜபக்ச ராஜமகேந்திரன் கூட்டணி செயற்படுகின்றது. அத்துடன் மாத்தறை பொலிஸார் எனக்கு எதிராக செயற்பட முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment