சர்ச்சையில் சிக்கினார் ராகுல் காந்தி!! ராகுல் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடர முடிவு!
மத்திய பிரதேச மாநில பழங்குடியின பெண்களிடம் இழி வாக பேசிய ராகுல் காந்தி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடரப் போவதாக பாரதிய ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17ம் திகதி மத்திய பிரதேச மாநிலம் சஸ்டோலில் ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் பிரபாத் ஜா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பழங்குடியின பெண்களை பார்த்து பாரதிய ஜனதா ஆட்சியில் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் கிடையாது என கேட்டதாக பிரபாத் ஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களிடம் பொதுக் கூட்டத்தில் இவ்வாறு பேசிய ராகுல் காந்திக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தின் கீழ் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அவர் தெரிவித்துள்ளார். 'ராகுல் காந்தி பண்டிகை கால அரசியல் வாதி' என்றும் பிரபாத் ஜா கிண்டல் செய்துள்ளார்.
0 comments :
Post a Comment