ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் சத்தியப் பிரமாணம்! சம்பந்தியின் முடிவு சிறந்த முடிவாம் வாசு!
த.தே.கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்ச ராகப் பெயரிடப்பட்டுள்ள சி. வி. விக்கினேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடிவெடுத்தமை வடக்கும் ஜனாதிபதியின் கீழ்தான் என்பதற்கான நல்ல சான்று என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா கூறியுள்ளார்.
த.தே.கூ வின் இந்த தீர்மானத்தையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப் பிட்டுள்ளார்.
இதேவேளை இராணுவ ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயகத்தின் ஊடாக பிரிவினை வாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக் களின் நோக்கங்களை நிறைவேற்றுகின்றார் எனவும் அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம் எனவும் அரசியல் வாதிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment