வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரைப் பணியில் அமர்த் துவது ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் பிரதம கட்டளைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ஷவின் தற்றுணிபு அதிகாரமாகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வணிகசூரியா கூறி யுள்ளார். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வட மாகாணத்தில் பணியாளர்கள் தொகுதிகளையும் சொத்துக்களையும் அமர்த் துதல் தொடர்பில எவ்வித நிச்சயமற்றதன்மையும் இல்லை என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எஃப், டெலோ, புளொட் மற்றும் தஐவிகூ ஆகியன இணைந்த அமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செப் 21 தேர்தலில் அடைந்த எழுச்சி பற்றி ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக் கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபையின் ஆரம்ப அமர்வு அக்டோபர் 25 ல் நிகழவிருப்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment