இலங்கையின் அதிசிறந்த நூலகமாக யாழ். பொது நூலகம் தரமுயர்த்தப்பட்டுள்ளது!
ஆசியாவில் மிகச்சிறந்த நூலகமாக திகழ்ந்த யாழ். நூலகம், 1981ம் ஆண்டு எரிக்கப்பட்டது. அதற்கு முன்னர், அதிசிறந்த நூலகமாக யாழ். நூலகம் காணப்பட்டது. 1981ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில், குண்டர்களினால் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. பின்னர், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, நூலகத்தை சிறப்பாக முடியாத நிலை காணப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் அமைதி சூழலில், இந்த நூலகத்தை சிறப்பாக கட்டி யெழுப்ப, அரசாங்கம் சகல விதமான நடவடிக்கைகளையும், மேற்கொண்டுள்ளது. இந்த நூலகம், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை, அவதானிக்க முடிகிறது. தற்போது இந்நூலகம் தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் அதிசிறந்த நூலகமாக, இம்மாதம் முதல் மீண்டும் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், 2013ம் ஆண்டுக்கான சிறந்த நூலகமாகவும், யாழ். பொது நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான சிறந்த ஆவணவாக்கல் விருது மற்றும் சிறந்த வாசிப்பு மாத விருது ஆகிய விருதுகளை, யாழ். நூலகம் தட்டிக்கொண்டுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
இவ்வளவு உதவிகளையும் இலங்கை அரசு செய்தாலும் , காட்டு மிராண்டி யாழ் பாணிகள் திருந்தி இவ் நவீன உலகுக்கு ஏற்ற மாதிரி வாழ்வார்களா , அல்லது தங்கள் கொலை வெறியுடன் அலைவார்களா ?
Post a Comment