வினைத்திறன் மிக்க சேவைக்காக மாவட்டசெயலாளர்கள் அர்பணிப்புடன் செயலாற்றுவார்கள்; ஜனாதிபதி
வினைத்திறன் மிக்க அரச சேவையினை முன்னெடுக்கும் வகையில் உயர்ந்த பட்சம் அரசாங்கத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மாவட்ட செயலாளர்கள் அரப்பணிப்பு மிக்க சேவையினை மேற்கொள்வார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்று கொள்ளும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. தமது மாவட்டங்களில் பொதுவாக எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான யோசனைகளும் மாவட்ட செயலாளர்களினால் சமர்பிக்கப்பட்டன.
நாட்டை கட்டியெழுப்பும் அபிவிருத்தி வேலை திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்காக மாவட்ட செயலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தை தயாரிக்க முன் சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த கூடியோரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெறப்படுகின்றன. இதற்கமைய 2014ம்' ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்காக பல தரப்பினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பல சுற்று பேச்சுவாரத்தைகள் இடம்பெறவுள்ளன. அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதி செயலாணியின் பொறுப்பாளர் காமினி செனரத் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment