குழந்தைக்கு எமனான சேலைத் தலைப்பு
வீட்டில் கட்டிலில் படுத்திருந்த குழந்தையை போர்த்தியிருந்த சேலை, முகத்தை மூடியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 மாத பெண் குழந்தை இறந்துள்ளது. 10 ம் திகதி இரவு குழந்தையை கட்டிலில் வளர்த்தி விட்டு தாய் சமையலறை வேலையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் குழந்தையை சென்று பார்க்கும்போது, குழந்தையின் தலை சேலையால் சுற்றப்பட்டிருந்துள்ளது.
உடனடியாக குழந்தையை களுபோவில மருத்துவமனைக்கு குந்தையை கொண்டு சென்ற போதும் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்..
0 comments :
Post a Comment