Monday, October 7, 2013

மாத்தறையில் இடம்பெற்ற மோதல்களும் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளும்!

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்த மங்கள சமரவீரவுக்கு எந்தவித உரிமையும் இல்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் இரத்தத்தை சூடாக்க வேண்டாம் என மங்கள எதிர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாத்த றையில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து மங்கள சமரவீரவுக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியனரின் எதிர்ப் புக்கள் வலுப்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்திலிருந்து வெளியேற வேண்டும் என வற்புறுத்தி தெவிநுவரவிலிருந்து கொழும்பிற்கு அமைதி பேரணியில் வந்தவர்கள் மீது மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை காலை முதல் அமைதி பாதயாத்திரையில் ஈடுப்பட்ட போது அதனை குழப்புவதற்கு தயாராக இருந்த தற்கான சாட்சிகள் போதியளவு உண்டென்றும் இவ்வாறான நிலைமையை உருவாக்கி ஏனைய தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி குழப்பம் விளைவித்தமை கண்டிக்கத்தக்கது என குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை இந்த அமைதியற்ற சூழ்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மங்கள சமரவீர இதற்கான பொறுப்பை வேறு தரப்பினர் மீது சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ப்பட்டமையானது ஜனாதிபதி ஆலோசகரும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கியவருமான ஹேமன் குணரத்னவின் ஆலோசனைக் கமையவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹேமன் குணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது தந்தை ஜனாதிபதியின் ஆலோசகர் என மங்கள சமரவீர கூறியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷவின் குழுவினரே எம்மை தாக்கியதாகவும் மங்கள சமரவீர தெரிவிக் கிறார். இவர் இருவேறு கருத்துக்களை இந்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கும் போது எவ்வாறு கோட்டாபாய ராஜபக்ஷவின் குழுவினர் எம்மை தாக்கியிருக்கலாம்.

எனது தந்தை ஜனாதிபதி ஆலோசகர் என்பதை முடியுமானால் உறுதிபடுத்தும் பட்சத்தில் நான் எனது மாகாண சபை உறுப்பினர் பதவியை துறக்க தயாராக வுள்ளேன். இவருக்கு இதனை ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ள முடியாதபட்சத்தில் அவர் ஒரு சிறந்த தலைவராக இருந்தால் தயவு செய்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். மங்கள சமரவீர என்றும் சிறு பிள்ளை தனமான கருத்துக்களையே தெரிவிப்பவர். இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருக்கும் போதும் எம்மை தாக்கினார். தற்பொது ஐக்கிய தேசிய கட்சிக்குள் புகுந்து ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக எம்மை தாக்குகிறார். ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்காக செயற்பட்டவர்கள் யார் என்பதை நாம் அறிந்துள்ளோம். இதனை முழு நாடும் கண்டது.

கட்சிக்காக பெரும் சவால்களையும், கஷ்டங்களையும், துயரங்களையும் சந்தித் துள்ள எமது இரத்தத்தை கொதிக்க வைக்க வேண்டாம் என மங்கள சமரவீரவை நான் கேட்டு கொள்கின்றேன். ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

எனினும் சிரால் லக்திலக வேறொரு கருத்தையே தெரிவிக்கின்றார். அமைதியாக ஆர்ப்பாட்ட பேரணி நடத்தும் போது அதற்கு தாக்குதல் மேற்கொள்ள மங்கள சமரவீரவுக்கு இருக்கும் உரிமை எது என நான் அவரை கேட்கின்றேன். இதற்கு மங்கல சமரவீர பதிலளிக்க வேண்டும். ஒவ்வொருவர் மீதும் குறை கூற வேண்டாம். கூடாரத்திற்குள் குதிரை புகுந்தது போன்றே மங்கல சமரவீரவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

எனினும் இந்த பாதயாத்திரைகள் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடக வியலாளர்களுக்கு உண்மை நிலையை நேரில் கண்டு கொள்ள முடிந்தது. ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பாதயாத்திரை சென்றவர்கள் தடிகளை கைகளில் எடுத்து சென்ற விதத்தை மாத்தறை நகர் ஊடாக சென்ற அனைவருக்கும் கண்டுகொள்ள முடிந்தது.

மேலும் மின்சார கம்பங்களுக்கு அருகாமையில் மிளகாய் தூள் பொதிகளும், கண்ணாடி துண்டுகளும், குவிக்கப்பட்டிருந்ததை எமது செய்தியாளர்களின் படப்பிடி ப்பு கருவிகளில் பதிவாகியுள்ளன. மங்கள சமரவீரவின் ஆதரவாளர்களே தம்மீது தாக்குதல் நடத்தியதாக எதிர்கட்சி தலைவருக்கு எதிரானவர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.

No comments:

Post a Comment