கள்ளப்படகில் இலங்கை செல்ல முயற்சித்த இலங்கை வாலிபர் தனுஷ்கோடி பொலிசாரிடம் சிக்கினார்!
விசா காலம் முடிந்து, ஓராண்டாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு தமிழகத்தில் தங்கியிருந்துவிட்டு தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகேறி இலங்கை செல்ல முயன்ற
போது பொலீசாரிடம் சிக்கினார்.
இலங்கை மட்டகளப்பு காத்தான்குடியை சேர்ந்த 33 வயதான சுதாகரன், 27.3.12இல் சுற்றுலா விசாவில், சென்னை வந்தார் இவருடைய விசா 22.9.12 உடன் விசா முடிந்ததும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதியில் தலைமறைவாக இருந்து, கூலி வேலை பார்த்து வந்த நிலையில் கள்ளப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை, தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கு வந்து படகுக்காக காத்திருந்ததை யறிந்த மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார், சுதாகரனை பிடித்து, விசாரித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment