பொதுநலவாய மாநாட்டில் பங் கேற்கும் வெளிநாட்டு பிரதி நிதிகள் வருகை தரும் விமானங்களை வரவேற்பதற்கு இலங்கை விமான நிலையங்கள் தயா ராகவுள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மட்டுமல்லாமல் மத்தல ராஜபக்ஷ விமான நிலையமும் இரத்மலானை விமான நிலையமும் இதற்காக தயார்படுத் தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகள் 5 ஆயிரத்திற்கு மேற்பட் டோர் மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர். இவர்கள் வருகை தரும் விமானங்களை தரையிறக்குவதற்கும் வெளியேறிச் செல்வதற்கும் விசேட செயல்த்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. அதன் ஓர் அங்கமாக இவ்விமான நிலையங்கள் அனைத்தும் விமானங்களை கையாளுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய மாநாடு நடைபெறும் காலகட்டம் இலங்கையின் விமான துறையில் மிகவும் பரபரப்பான தினங்களாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகை மட்டுமல்லாமல் அவர்களை விமான நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்வதற்கான விசேட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்களை உரிய வகையில் முன்னெடுப்பதன் மூலம் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தமது கடமைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment