சுரேசுக்கு எதிராக சுவரொட்டிகள் வடமாகாணம் முழுதும்!
வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் நியமனம் தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் த.தே.கூ பா.உ. சுரேஷ் பிரேமசந்திரனை விமர்சித்தும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பாராட்டியும் கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு உப்பட வட மாகாணம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கொலையாளிகளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்குவ தற்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று அவற்றில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. வியாழக் கிழமை இடம் பெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வில் ஒன்பது உறுப்பினர்கள் சமுகம் அளிக்கவில்லை.
பிரேமச் சந்திரனின் சகோதரர் உள்ளிட்ட குறைந்தது நான்கு பேருக்கு அமைச்சர் பதவி கேட்டு அவர்கள் இந்த பகிஷ்கரிப்பைச் செய்துள்ளனர். எனினும் முதல மைச்சர் அவர்களின் கோரிக்கைகயை புந்தள்ளி தான் விரும்பிய படித்தவர்கள் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார்.
பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட டெலோ சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலிலும் புளொட் சித்தார்த்தன், லிங்கநாதன் அவர்களின் பொதுச் செயலாளர் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்துளனர் என்பது குறிப்பிடத் தக்கது. முள்ளிவாய்க்காலில் சத்தியம் செய்தாலும் அவர்களுக்குப் பொருத்தமான முல்லேரியாவில் சத்தியம் செய்தாலும் இலங்கை அரசின் கீழேயே சத்தியம் செய்கிறோம் என்பது இந்த பதவிப் பித்தர்களுக்குத் தெரியாது. இவர்களெல்லாம்........
1 comments :
உண்மையாக சொல்லப்போனால், தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில், நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலுள்ள உறுப்பினர்களை தெரிவு செய்ய விரும்பியதன் காரணமாகவே இந்த போலி வேடம்போட்ட கள்ளர்களுக்கும் வாய்ப்பு கிட்டியது.
இதுகளுக்கு படிப்பு, பண்பு, தராதரம், திறமை, அந்தஸ்து, அனுபவம் என்று ஒன்றுமில்லை, எனினும், எல்லோரும் அன்றைய தமிழீழ மாயாஜால இயக்கங்களிருந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி கொலை, கொள்ளை, களவு போன்ற கிரிமினல் வேலைகளை செய்து தங்களின் வயிற்றை வளர்த்த வந்த ஆசாமிகள்.
இப்படியான இவர்களுக்கு பதவிகள் கிடைத்ததே ஒரு பெரிய வரப்பிரசாரம். ஆனாலும், இன்றுவரை அதை உணர்ந்து திருந்துவதாக இல்லை.
அதற்கு மாறாக, மீண்டும் தங்கள் மாயாஜால விளையாட்டுகளை தொடங்கி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி தங்களின் சுயநல சொகுசு வாழ்க்கைக்கு திட்டம் போடுறாங்கள்.
தமிழ் மக்களே,
இதுகளை தேர்ந்தெடுத்தது எங்களின் பெரும் தவறு என்பது உண்மை..
இதுகளை விட அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்திருந்தால் மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும்.
Post a Comment