பிரபல நடிகையான ஜியாகான் தற்கொலை செய்துகொண் டதாக தெரிவிக்கபட்டுள்ள நிலையில் அவர் கொலை செய் யப்பட்டுள்ளார் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்து ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்தகொண்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பாக ஜியாவின் காதலர் சூரஜிடம் விசாரணை மேற்கொண்ட பொலீசார், பிறகு ஜியாகான் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந் நிலையில் இறந்தப்பிறகு ஜியா கானின் உடலை படம் பிடித்த அவரது தாய் அந்த புகைப்படங்களை வெளியிட் டார். அதில் ஜியா கானின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஜியா கானின் வக்கீல் தினேஷ் திவாரி வெளியிட்டுள்ள கடிதத்தில், தடயவியல் ஆய்வாளர்கள் ஜியாவின் கழுத்து பெல்டால் நெறிக்கப்பட்டு, அவர் இறந்தப்பிறகு மின்விசிறியில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் எனவும், அவர் மின்விசிறியில் தொங்கவிடப்பட்டிருக்கும் நேரத்திற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது என தெரிவித்துள்னர்.
No comments:
Post a Comment