நியூசிலாந்தில் உயர்கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான புதிய கல்விக்கொள்கையை அந்நாடு வெளியிட்டது!
நியூசிலாந்து நாட்டில் உயர்கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான புதிய கல்விக்கொள்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. உலகப் பொருளாதார நிலை சிக்க லாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கல்விக்காக மாண வர்கள் செலவிடும் தொகை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று நியூசிலாந்து விரும்புகின்றது.
மேலும், இங்கு வரும் மாணவர்கள் சிறந்த கல்வித்தரத்தையே பெறவேண்டும் என்பதனால் கல்வி நிர்வாகங்கள் அவற்றின் தரத்திற்கேற்ப மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் நான்காம் நிலையில் உள்ள நிறுவனங்களில் படிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெற்கு ஆசியாவிற்கான நியூசிலாந்து நாட்டின் கல்விப் பிரிவின் பிராந்திய இயக்குனரான சீனா ஜலில் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மற்றும் சர்வதேச ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வரம்பற்ற வேலை உரிமைகள் வழங்கப்படும். குறைந்தது ஒரு ஆண்டு காலமுடைய கல்வித் திட்டங்களில் சேரும் மூன்றாம் நிலை சர்வதேச மாணவர்கள் தங்களுடைய பருவத் தேர்வுகளின் இடைவெளியில் முழு நேர வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
உயர்தர வழங்குனரின் கீழ் 14 வார கால ஆங்கில மொழி பயிற்சித் திட்டத்தில் சேரும் சர்வதேச மாணவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என்று மூன்றாம் நிலைக் கல்வி, திறமை, வேலைவாய்ப்பு அமைச்சர் ஸ்டீவன் ஜாய்ஸ் மற்றும் குடிவரைவு அமைச்சர் மைக்கேல் வுட்ஹவுஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளனர்.
உலக நிதி நெருக்கடி மற்ற நாடுகளைப் போல் நியுசிலாந்தைக் கடுமையாகப் பாதிக்கவில்லை.ஆயினும் தகுந்த வேலை கிடைப்பதற்கு சிறிது காலம் எடுக்கக்கூடும் என்பதால் மாணவர்கள் அவர்களின் வாழ்க்கை செலவுகளை ஈடு செய்யத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்டீவன்ஸ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment