Sunday, October 13, 2013

பெனற் கூறே – இலங்கையின் புதிய இத்தாலிய தூதுவர்!

மேதகு தூதுவர் நாவலகே பெனற் கூறே இத்தாலிய குடியரசிற்கான இலங்கைத் தூதுவராக கடந்த 9 ம் திகதி ரோமில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தனது நியமனக் கடிதத்தை ரோமில் அமைந்துள்ள இத்தாலிய ஜனாதிபதி மாளிகையான குயிரினேலில் வைத்து இத்தாலிய ஜனாதிபதி மேதகு ஜியோர்ஜியோ நபோலிடானாவிடம் கையளிப்பார். குறே இத்தாலிக்கான இலங்கையின் 17வது தூதுவராவார்.

அதே சயமத்தில் அவர் கிரேக்க குடியரசு, சைப்ரஸ், மால்ட்டா, அல்பேனியா மற்றும் சன் மரினோ ஆகிய நாடுகளுக்கான தூதுவராகவும் கடமையாற்றுவார். அத்துடன் அவர் உலக உணவு அமைப்பு (FAO) மற்றும் ரோமைத் தளமாகக் கொண்டுள்ள உலக ணவுத் திட்டம் (WFP), விவசாய அபிவிருத்திக்கான பன்னாட்டு நிதியம் (IFAD) மற்றும் பண்பாட்டுச் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் மீளமைப்பதற்கான கற்கை மையம் (ICCROM) போன்ற வேறு பல பன்னாட்டு அமைப்புகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் கடமையாற்றுவார்.

கொலன்னாவை மற்றும் முல்லேரிய பகுதிகளில் பிரபல சமூக சேவையாளரான நாவலகே பெனற் கூறே மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) 1964 ல் அரசியலில் புகுந்தார். தொடர்ந்து 1970 ல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். 1991 ல் கொட்டிக்காவத்தை பிரதேச சபைத் தலைவராக இருந்த அவர் 1994 ல் மேற்கு மாகாண சபை உறுப்பினராகி அதே ஆண்டு பொதுத் தேர்தலில்’ வெற்றி பெற்று பாராளுமன்றத்திலும் நுழைந்தார். 1999 ம் ஆண்டு மக்கள் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பிரதி போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னராக அவர் மூன்றாண்டுகள் பிலிப்பைன்சில் தூதுவராகவும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணுப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

திரு பெனற் தனது நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் பெற்றுக்கொண்டபோது எடுத்துக்கொண்ட படம் இது.




டலஸ் அழகப்பெரும

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com