இந்தப் பிள்ளைகள் இந்தளவுக்கு எருமை மாடுகளா? இல்லை கழுதைகளா?
பிரித்தானிய பட்டம் வழங்கும் நிறுவனமொன்றை, இலங்கை வரலாற்றில் முதன் முதலாக தோற்று விக்கின்றது எனக் கூறும் அளவுக்கு பல்கலைக் கழக மாணவர்கள் எந்தளவு எருமைமாடுகளாக கழுதைகளாக இருக்கிறார்கள்? என உயர் கல்வியமைச்சர் எஸ். பீ. திசாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
இளவரசர் சார்ள்ஸின் கரங்களால் மீரிகம தனியார் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து மகஜர் ஒன்றை, சோசலிஸ மாணவர் சங்கம் நேற்று பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு கையளித்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்ளுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துரைக்கும் போது,
“இவர்கள் மடையர்கள் அல்லர். மாடுகளும் அல்ல. இந்த மாணவர்கள் எருமை மாடுகள். ஏன் என்றால் தற்போதைக்கு இலங்கையில் பட்டம் வழங்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் 26 உள்ளன. இவற்றுள் பிரித்தானிய பட்டம் வழங்க்க்கூடிய நிறுவனங்கள் 11 உள்ளன. இன்னும் 10 உடன் நாங்கள் கருமங்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.
இதுதான் வரலாற்றில் முதல் தடவை எனக் கூறுமளவுக்கு இந்த மாணவர்கள் இவ்வளவு எருமை மாடுகளா? எந்தளவு கழுதைகளாக இருக்கிறார்கள்... என்று சிந்தித்துப் பாருங்கள்.
மடைமைத் தனம்மிக்க பிள்ளைகளோடு கதைத்து வேலையில்லை. இன்னும் மனுக்களை முன்வைக்கலாம். இன்னும் உண்ணாவிரப் போராட்டங்களை முன்வைக் கலாம். எதனையும் செய்யலாம். ஆனாலும், நாங்கள் எங்கள் வேலைகளை சிறப்பாக மிகச் சிறப்பாக நடாத்திச் செல்கின்றோம்.
(கேஎப்)
0 comments :
Post a Comment