Friday, October 4, 2013

தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி அறிவித்தல்! ரணில் நிராகரிப்பு!

தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி ஐக்கிய பிட்சுக்களின் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறிய வேளை, அதனை நிராகரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

பிட்சுக்கள் முன்னணியின் பிரதான நிறைவேற்றுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பிட்சுக்கள் 12 பேருக்கும் ஐதேக தலைவருக்குமிடையே இன்று (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்கரமசிங்க அவ்வாறு குறிப்பிட்டார் என தேசிய பிட்சுக்களின் முன்னணியைச் சேர்ந்த உலுபனே சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஐக்கிய பிட்சுக்களின் முன்னணயின் கண்டி மாவட்ட செயலாளர் தல்பொத்த தம்மஜோதி தேரர், சிங்கள ஊடகமொன்றுக்கு விசேட செவ்வியொன்றை வழங்கிவிட்டுக் குறிப்பிடும்போது, வழக்கறிஞர் சிரால் லக்திலக்க, வழக்கறிஞர் மைத்திரி குணரத்ன என்போரின் தலைமையிலேயே இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்திற்கு முழு அநுசரணையையும் வழங்குவதாக ஐக்கிய பிட்சுக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் வீதி ஊர்வலம் நாளை (05) காலை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com