Friday, October 4, 2013

ஆனந்தராஜாவுக்கு நிம்மதி அடைக்கலநாதனுக்கு தலையிடி

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித் துறை நகர சபையில் ததேகூ-வைச் சேர்ந்த ந. ஆனந்தராஜுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு கிடைத்தது. கட்சியின் நியமப்படி அதிகூடிய விருப்பு வாக்குபெற்ற ஆனந்தராஜூக்கே நகரசபைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவதாக வந்த முன்னொரு காலம் அதன் தலைவராக இருந்த மாஜி எம்பியான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைவர் பதவி தனக்கே வேண்டும் என்று அடம் பிடித்து தலைவருக்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுத்து நகர சபையை ஒழுங்காக இயங்கவிடாது குழப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வட மாகாண சபைத் தேர்தல் வந்தது. வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவி வேண்டும் கொல்லைப் புறத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்த அவர் வட மாகாண சபையில் போட்டியிட்டார். ஆனந்தராஜும் வல்லை மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் சனியன் தொலைந்ததென்று.

ஆனால், அந்தச் சனியன் இப்பொழுது ரெலோ தலைவர் அடைக்கலநாதனைப் பிடித்துக் கொண்டது. வட மாகாண சபையில் ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக வன்னி மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கட்சியோ அந்த அமைச்சுப் பதவியை பதவிப் பித்தரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது. இதனால் மனமுடைந்த கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தீர்மானதுக்கு கட்டுப்பட்டாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதால் தனது தலைமைப் பதவியைத் தூக்கி எறியத் தீர்மானித்து விட்டார். நிச்சயமாக சிவாஜி இந்தப் பதவியையும் எட்டிப் பிடித்துவிடுவார்.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் தனக்கு சுகாதார அமைச்சை தரவேண்டும் என்று வேறு கேட்கிறாராம்

அடைக்கலநாதன் ரெலோவே அடைக்கலம் என்று இருந்தவர். சிவாஜியோ ஓடுகாலியாக கட்சியை விட்டோடி புதுக் கட்சி ஆரம்பித்து அது சந்தைப் படாததால் ஊதாரிப் பிள்ளைபோல திரும்பி வந்தவர்.

தங்கத்துரை, குட்டிமணி மற்றும் ஶ்ரீ சபாரட்னம் போன்ற எண்ணற்ற தியாகிகளின் ஆவிகள் இவரைப் போன்றவர்களைச் சும்மாவிடாது.

1 comments :

Anonymous ,  October 4, 2013 at 9:35 PM  

Ithu thaanda tamilan!!!

Vadakkatta tamilanum ondu thaan, Vadakku tamilanum ondru thaan!

Untha kiladukal - Sri Lanka tamilarakalai oru kaalamum nimmathiai irukka vidathukal.

AASANAM AASANAM - UTHU THAAN IVARKALIN SIMMAASANAM!

IVANKALUM - IVANKALIN ARASIALUM!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com