திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன
திருகோணமலை, இறால்குழி பாலத்திற்கு அண்மையில் துப்பாக்கி ரவைகள் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளே இதன் போது மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை நேற்று இரவு 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது நான்கு பொட்டிகளில் 3,000 ரவைகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரவைகளாக இவை இருக்கலாம் என கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment