பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வருகின்ற தலைவர்களுக்கான உணவினைப் பரிசோதிப்பதற்காக தனிக்குழு!
அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநட்டுக்கு கலந்துகொள்ள வருகை தரவுள்ள தலைவர்களுக்கான உணவு பற்றி பரிசோதிப்பதற்காக கொழும்பு நகர சபையினால் தனியாக ஒரு குழு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளது.
வைத்திய அதிகாரிகளின் தலைமைத்துவத்துடன் உள்ள இந்தக் குழுவில் மக்கள் சுகாதார பரிசோதகர்கள் எண்மர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்படவுள்ள உணவு, பானம் பற்றி இவர்கள் சென்று பரிசோதனை செய்வார்கள் என்றும் கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலுள்ள உணவு பற்றிய பரிசோ தனை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment