வடக்கில் வளர்ச்சி பெற்று வரும் பாலியல் தொழில். விசாகா தர்மதாச
முன்னாள் போர் வலயமான இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகமான பெண்கள் குடும்பத்தின் உணவுத் தேவைக்காக உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தந்தைமார், கணவன்மார் மற்றும் மகன்மார் போரில் இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போய்விட்டனர். இதனால் பாரிய குடும்பச் சுமையைத் தாங்கும் இவர்கள் தங்களின் குடும்பம் உயிர் வாழ்வதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய தாகவுள்ளது.
தங்களது பணத்தைப் பெருக்க விளையும் உள்ளூர் குழுக்கள் இவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர். இவ்வாறான பெண்கள் 7000 வரையில் உள்ளார்கள் என்று வடக்கைத் தளயமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனமான போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச கூறுகின்றார்.
2012 ல் வடபகுதியில் பெண்கள் தலைமை தாங்கும் 59,000 குடும்பங்கள் காணப்பட்டதாக அரசாங்கம் மதிப்பிட்டது.
வடக்கில் வலுவான இராணுவ பிரசன்னம், கட்டுமானப் பணிகளுக்காக மற்றும் தொழில்களுக்காக தெற்கில் இருந்து வந்த ஆண்களின் எண்ணிக்கை என்பன இந்த பாலியல் வர்த்தகம் பெருகுவதற்கு ஒருவகையில் நியாயமான காரணமாகும் என்று தர்மதாச IRIN இதழுக்குச் கூறியுள்ளார்.
அதற்கு மேலதிகமாக இலங்கையில் பிறந்தவர்களான வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமது தாய் மண்ணைணப் பார்க்க வருவது அதிகரித்துள்ளதும் இந்த பாலியல் தொழில் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று சாந்தினி வைரமுத்து என்ற சமூக சேவகி கூறுகின்றார்.
இலங்கையில் பாலியல் தொழில் சட்டமுரணானது.
வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவும், தமிழ்நாட்டில் தமது வக்கிரக அரசியல் வாழ்க்கைக்கு உரமூட்டவும் நொந்து நொருங்கிப் போயுள்ள இலங்கையித் தமிழரை தமிழீழக் கனவில் உசுப்பேத்திக்கொண்டிருக்கும் தமிழ் அரக்கர்கள், தமிழ் இனமே விபச்சார இனமாக மாறுவதற்கு முன்னர் , தயவு செய்து இந்த அபலைப் பெண்களின் குடும்பங்கள் வாழ்வதற்கு உதவ வேண்டும். தமிழீழக் கனவை பிறகு காணலாம்..
0 comments :
Post a Comment