இலங்கையர்கள் கனடிய விஸா பெறுவதற்கு புதிய விதி முறைகள்!
கனடா விஸா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்த வருடக் கடைசியிலிருந்து சில புதிய நிபந்தனைகளை(Biometrics Requirements) பூர்த்தி செய்வது அவசியமாகும். அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் அப்பேனியா, அல்ஜீரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சூடான், துனூசியா என்பன உட்பட மேலும் சில நாடுகளாகும்.
இந்த புதிய நிபந்தனைகளின்படி, ஒருவர் தனது விரல் அடையாளங்கள், புகைப்படங்கள் என்பனவற்றை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான
செலவாக மேலதிகமாக 85 கனடிய டொலர்களையும் செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கனடாவுக்குள் வந்துள்ளதை பின்னர் கனடிய அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். அதன்
காரணமாகவே இந்தப் புதிய விதிமுறைகளின் மூலம் கனடாவின் குடியேற்ற முறைமையைப் பாதுகாக்க முடியும் என கனடிய அரசு கருதுகிறது.
விருந்தினர்கள், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மாணவர்கள் என கனடிய விஸாவுக்கு விண்ணப்பித்துள்ள 3 இலட்சம் பேரில் 20 வீதத்தினர் இந்த விதிமுறை அமுல் செய்யப்பட்ட முதல் வருடத்தில் தமது சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குழந்தைகள், வயோதிபர்கள், இராஜதந்திரிகள் போன்றோருக்கு இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment