சண்டி ராணி. நையப்புடைப்பு! இருவர் வைத்தியசாலையில்!
பழைய விரோதத்தை மனதில் கொண்டு பெண் ஒருத்தி மேற்கொண்ட அடி, உதை, கத்திக் குத்து தாக்குதல்களுக்கு இலக்காகி புத்தளம் - சீரம்பியடி - சின்னநாகவில்லு பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவிக்கின்றனர்..
சந்தேக நபரான பெண், நிரோஷா என்ற பெண்ணை தாக்கியள்ளார். அதனைத் தடுக்க ஸ்வனிதா என்ற பெண் வந்துள்ளார். அவரையும் சந்தேக நபர் தாக்கியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment