தனக்கு பிரதமராக வேண்டிய அல்லது ஜனாதிபதியாக வேண்டிய பேராசை கிஞ்சித்தும் கிடையாது . நீங்கள் அரசியிலிருந்து ஓய்வெ டுத்துக் கொள்ளுங்கள் என்று பொதுமக்கள் என்னைக் கேட்டால் எதுவும் அரசியிலுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
கல்கமுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
'நான் பொதுமக்களின் விருப்பியலையே மதிக்கிறேன். பொதுமக்கள் நீ போய்விடு, நீ தகுதியில்லை போய்விடு' எனச் சொல்வார்களாயின் நான் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடத் தயாராக இருக்கிறேன். 'நீ அரசியலுக்கே பொருத்தமில்லை. ஒதுங்கிப் போய்விடு' என்று சொன்னாலும் மறுபேச்சின்றி நான் போய்விடுவேன்.
எங்களுக்குள்ள ஒரே பேராசை, வரலாற்றுப் பாரம்பரம்பரியம்மிக்க நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது. பிரதமராவதற்கோ ஜனாதிபதியாவதற்கோ எனக்கு பேராசை கிடையாது. என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment