ஐதேகாவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்! தலைவர் ரணிலேதான்!
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாக ஸ்ரீகொத்தவிலிருந்து நம்பகத் தன்மை வாய்ந்த செய்திகள் கசிந்துள்ளன.
சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்படவுள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது.
ரணசிங்க பிரேமதாச, காமினி திசாநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மகிந்த ராஜபக்ஷ ஆகிய அனைவரும் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தம் கைவசம் வைத்துக் கொள்ளாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்களாக நின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டக் குழுவினர், ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராக இருக்கும் போது, சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(கேஎப்)
1 comments :
வேட்பாளராக நாயையும் நிறுத்தலாம். ஆனால் வெற்றியடையவேண்டும்
Post a Comment