மேல் மாகாண சபை வேட்பாளராக கூட்டணியிலிருந்து ஹிருணிகா...?
எதிர்வரும் மேல்மாகாண சபைத் தேர்தலில் காலஞ்சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர போட்டியிடத் தயாராகவிருப்பதாக செய்திகள் கசிகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகவே அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அவரின் தந்தையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சென்ற மாகாண சபைத் தேர்தலின் போது முல்லேரியாவில் வைத்து கொலை செய்யப்பட்டார் என்பது வாசகர்கள் அறிந்ததே.
(கேஎப்)
0 comments :
Post a Comment