பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சென்றார்களா? இல்லையா? என்பதை பெற்றோருக்கு அறிந்து கொள்ள புதிய முறை!
பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சென்றார்களா? இல்லையா? என்பதை பெற்றோருக்கு அறிந்து கொள்ள புதிய முறை யொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு, ஐ-காட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் பிள்ளைகள் பிரவேசிக்கும் இடங்களில் பொருத்தப்படும் இலத்திரனியல் கருவிகளில் மாணவர்கள் தமது ஐ-காட் அட்டைகளை செலுத்துவதன் மூலம், அவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்தார்கள் என்ற தகவல்கள், குறுந்தகவல்கள் மூலம் பெற்றோரை சென்றடைய முடியும்.
பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கல்வியமைச்சு, மொபிடல் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை அமுல்ப்படுத்துகிறது. இதன் அங்கு ரார்ப்பண நிகழ்வு, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் தலைமையில், கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment