காதலுக்கும், வாழ்க்கைக்கும் விஷ ஊசி ஏற்றி முற்றுப்புள்ளி வைத்த காதலர்கள்! வெள்ளவாயவில் சம்பவம்!
தமக்குத் தாமே விஷ ஊசி ஏற்றி காதலனும் காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெள்ளவாய எல்ல ரந்தெனிய காட்டுப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. வெள்ளவாய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைய டுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேற்படி இருவரது சடலங்களை மீட்டனர். அத்துடன் விஷக் குப்பியொன்றும் ஊசியொன்றையும், தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கடற் படையில் கடமை யாற்றும் கடற்படை வீரர் ஒருவரும் மருத்துவமனையில் சேவையாற்றும் தாதி ஒருவரும் ஒருவருமே இவ்வாறு தற்கொலை செய்துகொண் டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட தாதி சூரியகமை என்ற இடத்தைச் சேர்ந்தவ ரென்றும், கடற்படை வீரர் பதுளையைச் சேர்ந்த வாசனாகம என்ற இடத்தைச் சேர்ந்தவரா வார். இவ்விருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடித்து இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே இருவரும் காதல் வலையில் சிக்கியுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட தாதி தனது கணவனுக்கும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர் தனது மனைவிக்கும், இரு குழந் தைகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை தபாலில் சேர்ந்துவிட்டே இவ்விருவரும் விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment