Thursday, October 17, 2013

ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் இருந்து தியத்தலாவ திசையில் 300 மீற்றர் தூரத்தில் சென்ற போது ரயில் முன் இன்று (17) காலை பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெலிமட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய ஜே.எம்.நதுஷானி ஷாலிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment