உலகத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட ஏற்பாடுகள்
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர் அமர்வில் பங்குபெறும் நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்களுக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதுடன் அமர்வு நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்பதுடன் அமர்வுகளை முன்னிட்டு நகரத்தின் சாதாரண நடவடிக்கைகள் எந்த வகையிலும் முடக்கப்பட மாட்டாது என லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment