அப்பாடா! முதலமைச்சர் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி முன்னிலையில்!
வரும் 7 ம் திகதி திங்கட் கிழமை ஜனாதிபதி முன்னிலை யில் வட மாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக த.தே.கூ-வின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வு காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் இடம் பெறும்.
வட மாகாண அமைச்சர்களின் பதவியேற்பு 11 ம் திகதி யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் இடம் பெறும். எனினும் யார் யார் அமைச்சர்கள் என்பதில் இன்னும் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் சேவை என்பதை விட, தனது மனைவி மக்களின் தேவை என்பதிலேயே கண்ணுக் கருத்துமாக இருந்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள விழைகிறார்கள்.
1 comments :
எங்க போனாலும் கடைசியில் அவரிடம் தான் வர வேண்டும், இப்பவாவது புரியுதா கூட்டமைப்பின் பம்மாத்து, புலிகளால் உருவாக்கப் பட்ட கூத்தமைப்பு ஜனாதிபதியில் காலில் விழுவது மிக சந்தோசமான விடையம், இனியாவது தமிழ் ஈழம் பற்றி பேசும் மந்தைகள் ஓன்று பட்ட இலங்கையை ஏற்று கொண்டு தமது முட்டாள் கொள்கைகளை கை விட வேண்டும் .
Post a Comment