கனடாவிற்கு முன்னாள் பிரதமர் எச்சரிக்கை!
கனடா பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க கூடாதெ னவும் அவ்வாறு பகிஷ்கரித்தால் அது மோசமான முன் உதாரணமாக அமைந்து விடுமென கனடாவின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். கனடாவின் சிடிவி தொலைக் காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் முள்ரொனி இவ்வாறு தெரிவித்துள்ளார். கனடா ஏதோவொரு வகையில் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரித்தால் அது ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு தவறான முன் உதாரணமாக அமைவதுடன் சர்ச்சைக் குரிய விடயமாக மாறிவிடுமெனவும் தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பில் ஏராளமான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் காணப்படுகின்றன. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்நாடுகள் மாநாட்டில் பங்கேற்று வருகின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் ஜனநாயக நாடுகளுக்கு சிறந்த முன் உதாரணத்தை கனடாவினால் வழங்க முடியும். இம்மாநாட்டை புறக்கணிப்பது பொதுநலவாய நாடுகளுடன் பரஸ்பர கருத்து பரிமாற்றம் செய்வதற்குள்ள வாய்ப்பை இல்லாமல் செய்வதாகுமென சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர், கனடா அரசாங்கம் பொதுநலவாய அமைப்புடன் இணைந்து செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
53 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பானது பலமான ஒரு கட்டமைப்பென சுட்டிக்காட்டும் கனடாவின் முன்னாள் அமைச்சர் பிரைன் முள்ரொனி பொதுநலவாய அமைப்புடன் இணைந்து செயல்படுவதன் மூலம் கனடா பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ளலாமெனவும் தெரிவித்தார்.
1 comments :
What Mr.Brian said is reasonable and acceptable.If you try to boycott an international arena for certain reasons indicates that you haven't got the capablity to discuss the issues with the party concern.You are certainly making a distance in between with commonwealth coutries,which are taking part in the conferrence.Even you particularly
trying to make a vastness of space.
sometimes you may get lost from the eyes of Srilanka in the near future
Post a Comment