Sunday, October 27, 2013

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்கிய பிரஜைகள் குழு தலைவர் புதுக் கதை

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் எஸ்.சுதாகர் என்னும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவரும் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டறவுச் சங்கத்தின் தலைவருமாகிய கி.தேவராசா தாக்கியுள்ளதாக நெடுங்கேணி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரஜைகள் குழுதலைவரின் நெடுங்கேணியில் உள்ள கடைக்குச் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் சுதாகர் இவருடன் அரசியல் பற்றி கதைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து பிரஜைகள் குழுத் தலைவர் கி.தேவராசா தாக்கியதாக நெடுங்கேணி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார் சுதாகர்.

யுத்தம் காரணமாக ஒரு காலில் பாதிப்பை கொண்டிருந்த சுதாகர் இவரது தாக்குதலைத் தொடர்ந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பிரஜைகள் குழுவின் காப்பாளர் சண் மாஸ்ரருக்கு தேவராசா தெரியப்படுத்தியதாகவும், அவர் கூறிய ஆலோசனையின் படி தன் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் இராணுவ தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் நெடுங்கேணி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். றாமாவுக்குள் சிக்கிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 comments :

kajan ,  October 27, 2013 at 4:16 AM  

Nalla drama . Swiss embasikku ponanal udne visa.

Anonymous ,  October 27, 2013 at 5:27 AM  

The worst criminals in the present century.

Anonymous ,  October 27, 2013 at 9:42 PM  

இதுகள் எல்லாமே பர நாய் கூட்டங்கள், எதற்கு கடிபாடு, முரண்பாடு என்று எவரும் ஆராய்வதில் பிரயோசனமில்லை. இதுகளின் செயல்பாட்டால் தான் புலிகள் இதுகளை பங்கர் வெட்டவும், எல்லை காவலுக்கும் பாவித்தார்கள். இதுகளுக்கு அடக்குமுறை தான் சிறந்த மருந்து. அதை பாவித்தால் மட்டுமே குணப்படுத்தலாம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com