இலங்கையில் சிறுவர் உரிமைகளில் முன்னேற்றடைந்து வருகிறது-யுனிசெப்
சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சிறுவர் நலன்களை மேம்படுத்த உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி உனா மெக்காலீ தெரிவித்துள்ளார்.
மேலும் மிகவும் பின்தள்ளப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்ற சிறுவர் சிறுமியரின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலேயே யுனிசெப் கூடுதல் கவனம் செலுத்தி வந்ததாகத் தெரிவித்தார் அவர் யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய காலத்தில் தொடர்ந்தும் அபிவிருத்தி பணிகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment