Thursday, October 24, 2013

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு: கார்த்திகேசு

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி என்பது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அவ்வாறே இன்னுமொரு பழமொழியும் உண்டு அதாவது குளத்தை கலக்கி பிராந்துக்கு கொடுத்த கதை எனவும் ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியெல்லாம் அன்றே எம் முன்னோர் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக அதிலும் கிளிநொச்சியில் உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எழுதி வைத்துள்ளனர் என்று கூறுமளவுக்கு கிளிநொச்சியில் நிலைமைகள் நடந்தேறி வருகிறது.

அதாவது கடந்த 17 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் மேற்படி பழமொழிகளுக்கு பொருத்தமானதாகவே உள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை 17-10-2013 கரைச்சி பிரதேச சபையில் ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தயாபரன் அவர்களினால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் சிரமதான பணி மூலம் துப்பரவு செய்யவேண்டும் என ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை பிரதேச சபையின் உப தவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் அவர்கள் வழிமொழிந்து சபையில் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

கரைச்சி பிரதேச சபையின் தலைவர் நா.வை.குகராசாவும் இதனை வரவேற்று பேசியிருந்ததோடு சிரமதானத்திற்கு ஏற்பாடு செய்யவும் பணித்திருந்தார்.

இதன் பின்னர் 18-10-2013 காலை வெள்ளிக்கிழமை சிரமதானம் மேற்கொள்வதற்கு ஏற்பாடாக 17 ஆம் திகதி இரவு பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த சில மாவீரர்களின் பெற்றோர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அறிவித்து மறு நாள் துப்பரவு செய்வதற்கு தயாராக இருக்கும் படி தெரிவித்துள்ளனர்.

தங்களின் இறந்த பிள்ளைகளின் மீது கொண்ட பாசம் காரணமாக அந்த பெற்றோர்களும் சிரமதானத்திற்கு தயாராக இருந்துள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் வெள்ளிக்கிழமை (18.10) சிரமதான மூலம் துப்பரவு செய்ய வேண்டும்.

காலை ஒன்பது மணிக்கு தயாராக இருங்கள் என கரைச்சி பிரதேச சபையின் ஆளும் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சில மாவீரர்களின் பெற்றோர்களுக்கும் சில கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அறிவித்து விட்டு வெள்ளிக்கிழமை காலை அறிவித்த மற்றும் தீர்மானம் மேற்கொண்ட எவரும் சமூகமளிக்காது காணாமல் போனதால் சிரமதானத்திற்கு தயாராக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியமை ஒருபுறமிருக்க,

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் அறிந்த பொலிஸார் வியாழன் இரவு கரைச்சி பிரதேச சபை தவிசாளருடன் தொடர்புகொண்டு மயானங்கள் பிரதேச சபையின் கீழ் உள்ளதனை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் கனகபுரம் மயானம் தங்களின் கீழ் உள்ள மயானம் என்பதற்கான காணி ஆவணம் உள்ளிட்ட அதற்குரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு சிரமதான பணியில் ஈடுபடலாம் எனவும் இல்லையெனில் சட்டரீதியாக நீதிமன்றின் அனுமதியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் மாவீரர் துயிலுமில்லச் சூழலலில் வெள்ளிக்கிழமை பெருமளவிலான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அன்றைய தினம் தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் வழிமொழிந்தவர்கள் ஆதரித்தவர்கள் எவரையும் எங்கும் காணமுடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் தற்போது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் இரானுவத்தின் பூரண கட்டுப்பாட்டடின் கீழ் கொண்டுவரப்பட்டு கம்பிகட்டைகள் போடப்பட்டு வேலிகள் அடைத்து இராணுவ முகாம் அமைக்கும் பணியினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு காலமும் எவரும் கண்டுகொள்ளாது இருந்த துயிலுமில்லம் கரைச்சி பிரதேச சபையின் தீர்மானத்தின் விளைவாக இன்று இராணுவ முகாமாக மாறிவருகிறது.

எதை எப்பொழுது எங்கே செய்ய வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் கரைச்சி பிரதேச சபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பற்ற விதத்தில் சின்ன பொடியல் மேற்கொண்ட ஆர்வக்கோளாறு தீர்மானம் காரணமாக எங்கள் மக்கள் புனிதமாக கருதி வந்த இடம் இன்று இராணுவ முகாமாக மாறுகிறது. இப்படிப்பட்ட இந்த பொடியல் எப்படி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தேவைகள் குறித்து பொறுப்புடன் செயற்பட போகின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டது போன்று எல்லாவற்றுக்கு ஒரு காலம் உண்டு காலம் கனிந்து வரும் போது அந்தந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதைவிடுத்து அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளகின்ற எந்த பணிகளும் ஆபத்தில்தான் முடியும். சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்த சேராது என்பது போல இந்த கரைச்சி பிரதேச சபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செய்த வேலை இன்று வினையாகி போய்விட்டதாக பல மாவீரர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2 comments :

Anonymous ,  October 24, 2013 at 2:47 AM  

உண்மையை சொல்லப்போனால், இதுகளுக்கு படிப்பு, , பண்பு, தராதரம், திறமை, அனுபவம் என்று ஒன்றுமில்லை,

எனினும், எல்லோரும் அன்றைய தமிழீழ மாயாஜால இயக்கங்களிருந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி கொள்ளை, களவு கிரிமினல் வேலைகளை செய்து தங்களின் வயிற்றை வளர்த்த வந்த ஆசாமிகள்.

இப்படியான இவர்களுக்கு பதவிகள் கிடைத்ததே ஒரு பெரிய வரப்பிரசாரம். ஆனாலும், இன்றுவரை அதை உணர்ந்து திருந்துவதாக இல்லை.

அதற்கு மாறாக, மீண்டும் தங்கள் மாயாஜால விளையாட்டுகளை தொடங்கி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி தங்களின் சுயநல வாழ்க்கைக்கு திட்டம் போடுறாங்கள்.

தமிழ் மக்களே,
இதுகளை தேர்ந்தெடுத்தது எங்களின் பெரும் தவறு என்பது உண்மை..
இதுகளை விட அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்திருந்தால் மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும்.

Anonymous ,  October 24, 2013 at 12:39 PM  

The real fact is some elements try to get some popularity some or other.
in the public.Once they get a popularity,they know that they can can easily fill their own pockets.There is no true at all in their performances just lying and dramatizing the innocent public.it is really regrettable why the public is so innocent as they are not in position to trace down the crimnals.boasters,humbugs and liers.
Be sure we are sorrounded with pack of lies made by the opportunists time to time.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com