பொலிஸ் நிலையங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழல் எப்போது உருவாகும்? – சஜித்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அடிப்ப டையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நேற்று (25) பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அரசாங்கம் எப்போது ஸ்தாபிக்கப் போகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வினா எழுப்பியுள்ளார்.
பொலிஸ் நிலையங்கள் அரசியல்மயமாக்கப்படுகின்றதால் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் பிரதித் தலைவர்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸ் நிலையங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழல் எப்போது உருவாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விகளுக்கு பதலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பொலிஸ் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார். .
0 comments :
Post a Comment