Thursday, October 24, 2013

வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை முடக்குவதற்கு தலைப்பட்டார் அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸ.

வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை முடக்குவதற்கு தலைப்பட்டார் அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸ என ஐரிஎன் நடாத்திய நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாண தேர்தல் நடைபெற்ற பின்னர் வரதராஜப்பெருமாள் முதலமைச் சராக நியமிக்கப்பட்டார். ஆனால், வகிமா முதலமைச்சர் பெருமாள் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல ஆதரவளிக்காமல், எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு சேர்ந்து கொண்டு, பின்விளைவுகளைப் பற்றி அக்கறை கொள் ளாமல் வகிமா நிர்வாகத்தை முடக்குவதற்கு தலைப்பட்டார்.

அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸ. 1989 ல் அவர் பிரபாகரனோடு ஒப்பந்தம் செய்து கொண்டு இந்திய ஐபிகேஎப் படையை நாட்டிலிருந்து துரத்தும் முயற்சிகளை மேற் கொண்டார் பிரேமதாஸ. அவரின் முட்டாள் தனமான செயல்கள் காரணமாக தேசிய பிரச்சினையை அமைதி வழியில் தீர்ப்பதற்றகு எடுக்கப்பட்ட முயற்சிகள் பின்தள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com