Thursday, October 17, 2013

ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்கிறார் விக்னேஷ்வரன்!

வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான பொறுப்புக் களை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள் ளார். இப்பதவிப் பிரமாணமானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் இப் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற வுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. விக்னேஷ்வரன் வெற்றி பெற்றதன் பின்னர் மாகாண முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும் ஜனாதிபதி முன்னிலையிலேயே இடம்பெற்றது.

அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து அமைச்சர்களும் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

(கேஎப்)

1 comment:

  1. May be it is a very good start for a "Golden Era" of the whole country.

    ReplyDelete