பொறியியலாளர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது - கோட்டாபய
கொழும்பு நகரை உலகின் மிக இரம்மியமான நகராக மாற்றி யமைப்பதற்கு இலங்கை பொறியியலாளர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கதென, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பொறியியலாளர் சங்கம் கொழும்பில் நடாத்திய 2013ம் ஆண்டுக்கான தேசிய பொறியியல் மாநாட்டின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் திலக் டி சில்வாவும், இதில் கலந்து கொண்டார். பாதுகாப்பு செயலாளர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், விமான நிலையம், துறை முகம் உட்பட பல பிரிவுகளில் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. எதிர்கால த்தில் இந்நிலைமை மேலும் முன்னேற்றமடைந்து, இளம் சந்ததியினருக்கு சிறந் ததொரு எதிர்காலம் நிச்சயம் உருவாகுமென, பாதுகாப்பு செயலாளர் சுட்டிக் காட்டினார்.
0 comments :
Post a Comment